Friday, April 28, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தியும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரியும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்படும் கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு முடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer