இலங்கை பொலிஸாரின் சீருடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் கடும் நீல நிறத்திற்கு பொலிஸாரின் சீருடைகள் மாற்றமடையவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள், வன்னி நிலப்பரப்பை ஆண்ட வேளை. தமிழீழ காவல் துறையும் இயங்கி வந்தது. அதன் நிறம் கடும் நீல நிறம் ஆகும்.
தற்போது தமிழீழ காவல் துறை அணிந்த அதே நிறத்தில் தான், இலங்கை பொலிசாரின் உடைகளும் மாற்றப்பட உள்ளது. சர்வதேச பொலிஸாரின் சீருடை நிறங்களை கருத்திற் கொண்டே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை தற்போது சிங்கள பொலிசாருக்கு கொடுக்கப்பட உள்ளது?
Monday, April 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment