Sunday, April 2, 2017

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

ஆனால் சிலவகை காய்கறிகளை நாம் பச்சையாக சாப்பிடும்போது அதில் உள்ள கார்போஹைரேட் சரியாக ஜீரணிக்காமல் அஜீரண கோளாறினை ஏற்படுத்துகிறது.

இன்னும் சில உணவுகளில் உள்ள பாக்டீரியாக்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு நாம் பச்சையாக உண்ணாமல் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்.

உருளைகிழங்கு

உருளைகிழங்கினை பச்சையாக உண்ணும்போது அதில் உள்ள ஸ்டார்ச்சானது ஜீரணமடையாது. அதிலுள்ள வாயுவானது வயிறு உப்புசத்தை அளிக்கும்.

மேலும் உருளையில் உள்ள சொலனைன் என்னும் விஷத்தன்மை உள்ளதால் பச்சையாக உண்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

முளைக்கட்டிய பயிறு

முளைக்கட்டிய பயிறு வகைகளில் ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருகும் அபாயம் உள்ளது.

எனவே குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை பச்சையாக உண்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

சிவப்பு பீன்ஸ்

சிவப்பு பீன்ஸில் உள்ள லெக்டின் மற்றும் ஃபைடோஹீம்அளூடினின் என்னும் வேதிப்பொருள்கள் வாந்தி, பேதி மற்றும் மயக்கத்தினை ஏற்படுத்தும்.

தேன்

தேன் உடலுக்கு நல்லது எனினும் அதிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்னும் வேதிப்பொருளானது ஒவ்வாமையினை ஏற்படுத்தும்.

எனவே இதனை வேறு ஏதாவது பொருளுடன் கலந்தே குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

பால்

பாலினை பச்சையாக குடிப்பதால் இதில் உள்ள கிருமிகள் குடல்நோயினை உருவாக்கிவிடும், எனவே பாலை நன்கு காய்ச்சியே பருகவேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer