Sunday, April 30, 2017

முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய நரேந்திர மோடி, இஸ்லாத்தின் தீய சக்தியாக இருக்கும் முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாம் அறிஞர்கள் முன்வந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

காலத்துக்கு ஏற்ப இஸ்லாமியர்களின் சட்டத் திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று கூறியுள்ளார். காலாவதியான நடைமுறைகளை விடுத்து புதிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, முத்தலாக் விவகாரத்தை  இஸ்லாமியர்கள் அரசியலுக்கு எதிரானதாக பார்க்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer