Monday, April 3, 2017

வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, வடக்கு மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி விளக்கியதாகவும், வடக்கு மாகாண மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer