விவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்ததால் முதல்வர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சாராத அமைப்பு ஒன்று, தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.அந்த மனுவுக்கு பதில்ம னுவாக இன்று பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.அதில் வறட்சி காரணமாக தமிழகத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துக்கொள்ளவில்லை
என்றும், குடும்ப பிரச்சனை காரணமாகவே விவசாயிகளில் பாதிபேர் தற்கொலை செய்துக்கொண்டனர் எனறும், மற்றவர்கள் வயது மூப்பு, வியாதி காரணமாக
உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கொந்தளிப்பில் உள்ளனர் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள்.. இதையடுத்து, தஞ்சையில் விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்தும், சாலைகளை மறித்தும் முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Home
»
Sri Lanka
»
விவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்ததால் முதல்வர் உருவ பொம்மை எரிப்பு
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment