Friday, April 28, 2017

ப.பாண்டி படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருகிறார் விஜய் டி.வி புகழ் டி.டி. ஆனால் சுசி லீக்ஸ் படங்களினால் படு பேமஸ் ஆகியிருந்தாரல்லவா?

அதன் எதிரொலி அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்டது. மிக மிக சொற்ப எண்ணிக்கையில் அழைக்கப்பட்டிருந்த பிரஸ், டி.டி யை பார்த்ததும் செம துள்ளு துள்ளிவிட்டது. தனியாக அவரை மடக்கிய சிலர், “ஏங்க அந்த சுசி லீக்ஸ் விவகாரத்தில் உங்க பெயர் அநியாயத்துக்கு டேமேஜ் ஆகிருச்சே? அது பற்றி என்ன சொல்லப் போறீங்க?” என்று கேட்க, டி.டியின் முகத்தில் டன் கணக்கில் சோகம்.

“வீட்ல எங்க மாமியார் என்னை திட்டி தீர்த்துட்டாங்க. என்ன பதில் சொல்றதுண்ணே தெரியல. மறுபடியும் நீங்க கிளப்பி விட்றாதீங்க. ப்ளீஸ்” என்றார். ஆனால் ஜீபூம்பா விட்டால்தானே? அப்படத்தின் டைட்டிலில் செல்வி டி.டி என்று அறிவித்து இந்த உலகத்திற்கு எதையோ சொல்ல வந்தார் இயக்குனர் தனுஷ். மறுபடி டி.டி. சிக்குனா இதுதான் முதல் கேள்வியா இருக்கும்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer