நாட்டிலிருந்து மலேரியா நோய் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளினால் மலேரியா நோய் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக மலேரியா தினம் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அவர் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பினரால் மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதோடு, உலகின் பல நாடுகளில் இன்னும் இந்த நோயின் தாக்கம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Monday, April 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment