நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப வானிலை காரணமாக நோய்த் தொற்று வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்தியர்கள், மக்களை அதிகளவு நீரைக் பருகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த வெப்ப வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது கடும் வெப்பம் நிலவுவதால் கண்நோய் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக கண்சத்திரசிகிச்சை சங்கத்தின் தலைவர் டொக்டர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பதை அடுத்து வைரஸ்நோயும் பரவ ஆரம்பித்துள்ளது. கண்நோயும் பல இடங்களில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Tuesday, April 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment