கணவர் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை நந்தினி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினிக்கும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமண நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் தன் மரணத்துக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நந்தினி மற்றும் அவர் தந்தை ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கைதுக்கு பயந்து நந்தினியும் அவர் தந்தையும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், நந்தினியும் அவர் தந்தையும் எந்நேரத்திலும் கைதாகலாம் என தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
Thursday, April 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment