Wednesday, April 12, 2017

ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னால் அதிபர் மஹ்மௌட் அஹ்மதிநெஜாட் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக ஈரான் ஆன்மீகத் தலைவர் அயதொல்லா அலி கமெனெய் இனது அறிவுரையின் படித் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தனது ஆட்சியின் கீழ் முன்னால் பிரதி அதிபராக செயற்பட்ட ஹமீட் பகாயே இற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போதும் முடிவில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹமீட் பகாயே உம் இன்று புதன்கிழமையே தனது அதிபர் வேட்பாளர் பதிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஹ்மதிநெஜாட் உள்துறை அமைச்சுக்கு அளித்த தகவலில் கமெனெயின் அறிவுரை ஒரு தடையல்ல என்றும் அவருக்கு நான் அளித்த வாக்குறுதிக்குக் கட்டுப்படுகின்றேன் எனவும் கூறியதுடன் தான் வேட்பாளர் பதிவு நிலையத்துக்கு வந்த நோக்கம் ஹமீட் இற்கு ஆதரவளிப்பதே என்றும் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ரீதியாகப் பிளவு பட்ட நாடாக ஈரான் விளங்கிய போது அஹ்மதிநெஜாட் பதவி விலகி இருந்தார்.

ஆனாலும் இவர் பதவி வகித்த இரு முறையிலும் ஈரான் மேற்குலக மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான நாடாக விளங்கியதுடன் ஹோலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாடாகவும் விளங்கியது. இதனால் இன்றும் அஹ்மதிநெஜாட்டுக்கு மக்கள் மத்தியில் சற்று செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer