Sunday, April 2, 2017

தினமும் சரியான உடற்பயிற்சியினையும் உணவு முறையினையும் மேற்கொண்டால் உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்து கொள்ளலாம்.

எந்த ஆசனம் உடற்பயிற்சியினை மேற்கொண்டாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருக்கவேண்டும். அதற்கு பயன்படும் ஆசனமே யோகமுத்ரா.

செய்யும் முறை

முதலில் பத்மாசனத்தில் அமரவேண்டும். பின்னர் மூச்சினை நன்கு இழுத்து வைத்து கொள்ளவேண்டும்.

10 முதல் 15 விநாடிகளுக்கு மூச்சினை வெளிவிடாமல் இருக்கவேண்டும். பின் மெதுமெதுவாக மூச்சினை வெளிவிட வேண்டும்.

இரு கைகளை பின்புறமாக கட்டி கொண்டு மெதுவாக குனியவேண்டும். குனியும்போது தரையில் நன்கு அழுந்த அமர்ந்தே இருக்கவேண்டும்.

தலை மெதுவாக தரையினை தொடுமாறு குனியவேண்டும். முதலில் இந்த ஆசனத்தினை செய்யும் போது கால்களில் சிறிது வலி ஏற்படலாம். நாளடைவில் இந்த வலியானது சரியாகிவிடும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer