Wednesday, April 26, 2017

இந்திய திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன் படி கடந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் தேர்வாகி உள்ளார். தெலுங்கில் பிரபல இயக்குனராக விளங்கி வரும் இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சங்கராபரணம், சாகர சங்கமம், பிரேம பந்தம், சுவாதி முத்தியம் உட்பட பல வெற்றி படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்தவுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் இவர் இயக்கிய ‘சாகர சங்கமம்’ படம் தான் தமிழில் ‘சலங்கை ஒலி’ திரைப்படமாகவும், சுவாதி முத்தியம் படம் தான் தமிழில் 'சிப்பிக்குள் முத்து' திரைப்படமாகவும் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள இவர் தமிழில் ‘குருதிப்புனல்’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம வில்லன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை மற்றும் 10 லட்சம் ரொக்கம் அடங்கிய இந்த விருது விரைவில் கே.விஸ்வநாத்திற்கு கொடுக்கப்படவுள்ளது. இதற்கு முன் இந்த விருதை நம்  தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments :

Post a Comment

 
Toggle Footer