வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் முதலில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு ஏதோ சில காரணங்களால் சமந்தாவிற்கு பதிலாக, அந்த கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அமலாபாலிற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்படவே, அவரும் இந்த படத்திலிருந்து விலகி... அவருக்கு பதிலாக தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்த படத்தில் மூன்று முறை ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவிருக்கிறதாம். ஏற்கெனவே இந்த படத்தில் தனுஷுடன் ஆன்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தின் கதாநாயகியாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment