இலங்கையை முன்னேற்றும் பாதையில் செல்லும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்தியா தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, ரணில் விக்ரமசிங்கவிடம் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய- இலங்கை நட்புறவை உயர்மட்டத்திலும் நெருக்கமான முறையிலும் முன்னெடுப்பதன் முக்கியமாகும். இதற்காக இந்தியப் பிரதமர் வழங்கும் ஒத்துழைப்பிற்கு ரணில் விக்ரமசிங்க பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.
முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் பொறியியல், ஆகிய விடயங்கள் தொடர்பில் உயர் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு இரண்டு நாடுகளுக்கும் முக்கியமான விடயமாகும். இந்துசமுத்திர ஒழுங்கு விதிகள், தர்மம் மற்றும் சுதந்திர கப்பல் பயணத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இரு நாட்டுத்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்திய நிதியுதவியின் கீழ் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்திய பொருளாதாரம் வலுவடைந்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்தார்.
இரண்டு நாட்டு மக்களுக்கு இடையில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இதில் கைச்சாத்திட்டனர்.
இயற்கை எரிவாயுவைத் தயாரித்தல், சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், திருகோணமலை நகரம் மற்றும் பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி ரயில் சேவையை நவீனமயப்படுத்தல், கொள்கலன் பிரிவு, விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி நீர்முகாமைத்துவம் ஆகியன பல துறைகளுக்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன.
Home
»
Sri Lanka
»
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு!
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment