Tuesday, April 4, 2017

ஜெயலலிதா ஆட்சியில் போடபட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் வைகோ கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எக்மோர்
நீதிமன்றம் உத்தரவில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கால் வைகோ பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது 8 ஆண்டுகளுக்கு
முன்பு போடப்பட்ட வழக்கில் தற்போது வைகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது,
இந்த வழக்கை விரைந்து விசாரனை செய்யுங்கள் அல்லது என்னை கைது செய்யுங்கள்
என இன்று நீதிமன்றத்தில் வைகோ கூறியிருநதது குறிப்பிடதக்கது.

சொந்த ஜாமீன் பெற்று கொள்ளலாம் என நீதிபதி கூறியும் வேண்டாம் என மறுத்து
விளம்பரத்திற்காக மட்டுமே வைகோ 15நாள் சிறை சென்றதாக கூறப்படுகிறது

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம் என பேசினேன் என்றும்
ஈழத்தில் நடந்த படுகொலையை மூடிமறைக்க சதி நடக்கிறது என்றும் வைகோ
பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் சிறை செல்வதை கண்டித்து
மதிமுகவினர் போராட வேண்டாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer