Tuesday, April 4, 2017

இப்போது ஐந்து வயது மகளுடன் அலங்காரமாக வலம் வருகிறார்..

அறுபத்தாறு வயதா..?

பிள்ளையா..?

நீ கிழவியா ? இல்லை குமரியா..?

காசி, ராமேஸ்வரம் போகும் வயதில் பிள்ளையா.. நாசமாகப் போக.. இப்படியான பேச்சு வேண்ட வேண்டிய தமிழ் பெண்கள் உலகில் இது
நடக்கவில்லை.

ருமேனியா நாட்டின் புக்காரஸ்ற் நகரில் வயதான தாய் ஒருவர் தனது 66 வயதில் அழகான மகள் ஒருவரை பெற்றெடுத்தார்.

இப்போது 72 வயதைத் தொட்டுவிட்ட இந்த ருமேனிய பெண்மணியான அட்றியானா தனது ஐந்து வயது மகளுடன் பொழுதைக் கழிக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து 25 புத்தகங்களை எழுதி ஓய்வு பெற்ற பின்னர் இந்த அம்மையார் குழந்தை ஒன்றை பெற்றபோது உலகம் அவரை எதிர்த்து நின்றது அல்லது ஆச்சரியமடைந்தது.

இந்த வயதில் ஒருவருக்கு பிள்ளை பிறக்குமா..

நான் கருத்தரித்துவிட்டேன், இது எனது உடலில் உண்டான வாய்ப்பு இது இறைவன் தந்த வரம்..

உன்னால் முடியவில்லையா வாயை மூடு என்று குழந்தையை பெற தயாரானால் அட்றியானா..

இன்று காலத்தை வென்றவராக.. உலகத்தால் பேசப்படும் ஒரு பெண்ணாக வலம் வருகிறார்..

இந்தக் குழந்தையை மட்டும் பெறாமல் இருந்திருந்தால் உலகப்பந்தில் இவரும் பத்தோடு பதினொராவது பெண்மணிதான்.

எலிசாஸ் என்ற பெயர் கொண்ட தனது ஐந்து வயது மகளுடன் மகிழ்வாக வீதியில் வலம் வருகிறார் அட்றியானா..

அன்று அவர் கருத்தரித்தாலும் குழந்தையை பெற முடியவில்லை சத்திரசிகிச்சை மூலமே குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.

ஆனால் யாதொரு குறையும் இல்லாத பெண் குழந்தையாக அது பிறந்தது..

உலகில் வயதான ஒரு தாய்க்கு பிறந்த ஆரோக்கியமான குழந்தை என்ற புகழையும் தேடிக்கொண்டாள் அந்தக் குழந்தை.

ஆனால் முன்னேறாத இனமான ருமேனியர்களும் இப்பெண்ணை தப்பாகவே பார்க்கிறார்கள் போகவிட்டு புறணி பேசுகிறார்கள்..

தான் வீதியில் போகும்போது தன்னை ஒரு கிறேய்சி என்று பலர் கேலி செய்வதாகவும் அவர் கூறுகிறார்.

அவள் என் மகள்..

நான் அவள் தாய்..

நடுவில் நீங்கள் யார்..

வெற்றி நடை பயில்கிறார் இந்தத் தாய்..
அலைகள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer