Friday, April 28, 2017

நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளில் ஒரு சில உணவுகள் நம் உடலுக்கு தீங்கினை விளைவிப்பவை.

அன்றாட நமது உணவு பட்டியலில் அதிகம் எடுத்து கொள்ளக்கூடாத தவிர்க்க வேண்டிய உணவுகளும் உள்ளன.

பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி

அன்றாட உணவில் ஒரு வேளை மட்டுமே அரிசியினை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு வேளை சேர்த்து கொள்ளும் போது பசி எடுக்காது. உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

ஆனால் இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், தயாமின் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பதால் நுண் ஊட்டச்சத்து குறைபாடானது உண்டாகும்.

மூன்று வேளையும் வெள்ளை அரிசியினை உணவாக எடுத்து கொள்ளும் போது உடற்பருமன் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். வெள்ளை அரிசியில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், பாஸ்தா, பிரட் போன்ற உணவுகளையும் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

இறைச்சி

இறைச்சியினை அதிக அளவில் சேர்த்து கொண்டால் அதிலுள்ள புரதமானது செரிமானம் ஆகாமல் நச்சுக்களாக மாறுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இறைச்சியுடன் சேர்த்து உண்டால் எளிதில் செரிமானமாகிவிடும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிகளவில் உப்பு இருப்பதால் உயர் இரத்தம் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

காபி, டீ

காபியில் உள்ள காஃபின் நம் மூளையினையும் உடலையும் சுறுசுறுப்பாக மாற்றும் தன்மையுள்ளது. ஆனால் பார்கின்சன் போன்ற நோய்கள் உண்டாவதற்கு காரணமாகிறது.

அளவுக்கு அதிகமாக டீ அருந்துவது நமது இதயத்துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம், கவனமின்மை, பதற்றம், சோர்வு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

காஃபின் கால்சியத்தினை தடுப்பதால் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு சம்பந்தமான நோய் உண்டாகிறது.

இரவில் பால், தயிர், மோர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சத்துமாவு கஞ்சி, சுக்கு காபி, மூலிகை சாறு போன்றவற்றை அருந்தலாம்.

வெள்ளை சர்க்கரை

அனைத்து உணவிலும் தற்போது வெள்ளை சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகிறது. வெள்ளை சர்க்கரையினால் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உண்டாகிறது.

பல் வலி, சொத்தை, உடற்பருமன், இதயநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாவதற்கு இது தான் காரணமாகும். பேரீட்சை, உலர் திராட்சை, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

நொறுக்கு தீனிகள்

அதிகளவு நொறுக்கு தீனிகளை எடுத்து கொள்வதால் கொழுப்பானது அதிகரிக்கிறது. இதனால் உடல் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer