மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் 57.331 ஏக்கர் காணிகள் இராணுவம் உள்ளிட்ட முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
மேற்படி பகுதிகளில் இராணுவத்தினரினால் 25.58 ஏக்கரிலும், கடற்படையினரினால் 2.546 ஏக்கரிலும், பொலிஸாரினால் 29.205 ஏக்கரிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறக்கொட்டாஞ்சேனையில் பாடசாலை கட்டடத்துடன் உள்ளடங்கியதாக 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மாவட்டச் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான விடுதிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் தங்களின் வசம் வைத்துள்ளார்கள். குறித்த விடுதிகள் மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படுவதுடன் அரசாங்கக் கட்டடங்களிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டு அரச நிர்வாகத்துக்குப் பாதுகாப்புத் தரப்பினர் வழிவிட வேண்டும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
மட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்
Monday, April 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment