Saturday, April 1, 2017

அமெரிக்காவை சேர்ந்தவர் Haley Smith, இளம் பெண்ணான இவர் சிறு வயது முதலே குண்டாக இருப்பார்.

ஆனால் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன் மூலம் தற்போது இவர் 50 கிலோ எடை குறைந்துள்ளார்.

எடை குறைப்பு ரகசியத்தை Haley வெளியிட்டுள்ளார்.

டயட்டில் சிறிய மாற்றம்

தாமதமாக உணவு சாப்பிடுவதும், அதிகளவில் உணவு சாப்பிடுவதும் உடலுக்கு கேடு தரும்.

சரியான அளவில் உணவு சாப்பிடுவதுடன் இரவு 8 மணிக்கு மேல் ஏதும் சாப்பிட மாட்டேன் என Haley கூறியுள்ளார்.

உடற்பயிற்சி

வாரத்துக்கு ஆறு நாட்கள் உடற்பயிற்சி செய்தேன் எனவும், வாரத்துக்கு மூன்றரை மணி நேர உடற்பயிற்சி கட்டாயம் எனவும் Haley கூறுகிறார்.

முயற்சியை விடாதீர்கள்

நடைபயிற்சியும், ஜாக்கிங்கும் நான் தொடர்ந்து செய்வேன். பல முறை அது சவாலாக எனக்கு அமைந்தது. ஆனால் அதை மீறி செய்ததால் என் உடல் எடை குறைந்தது.

பலன் கிடைக்கும்

உடல் எடை குறைந்தவுடன் என் தன்னபிக்கை அளவு மிகவும் அதிகரித்துள்ளது. வாழ்க்கை கட்டுப்பாடாக இருப்பதாக தற்போது உணர்கிறேன் என்கிறார் Haley.

நிதானம் தேவை

உடல் எடையை குறைக்க நிதானமான நடவடிக்கையே தேவை. அதிக டயட், அதிக உடற்பயிற்சி என்பது பிரச்சனையாக அமையும். சரியான அளவில் செயல்பட வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer