தமிழ்த் தேசிய அரசியலில் ‘தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40வது நினைவு தினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அஞ்சலிக் கூட்டமும் இன்று காலை இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய அரசியலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினைத் தோற்றுவித்து, இளைஞர்களை அரசியலின் பக்கம் ஈர்த்தவர்களில் தந்தை செல்வா முக்கியமானவர். அவரின் அஹிம்சை வழிப் போராட்டங்கள், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு வழி வகித்தது.
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment