தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விவேகாநந்தன் புவிதரன், எம். நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும், உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, “எம்.ஏ.சுமந்திரன், எம். நிசாம் காரியப்பர், ஏ. எல். எம். ஹிதாயாத்துல்லா, விவேகாநந்தன் புவிதரன், தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, அனுர பண்டார மெத்தேகொட, நிஸ்ஸங்க நாணயக்கார, டபிள்யு. கே. அனுஜ கௌசிக்க பிரேமரத்ன, சமந்த ரத்வத்தே, விஜேரத்ன தர்மசேன, உபாலி சேனாரத்ன, பத்ம பண்டார, எஸ்.கே. மார்க் பீரிஸ், கருணாரத்ன ஹேரத், மஹேந்ர சுவந்தரத்ன, ஏ.பீ.சீ.எம். ஜயசேகர, மொஹான் வீரக்கோன், பீ.ஆர்.எஸ்.பீ. சமரநாயக்க, உபுல் ஜயசூரிய, ஆனந்த விக்ரமசேகர, பே.சீ. வெலிஅமுண, விஜய நிரஞ்சன் பெரேரா, கருணாதேவகே விமலதாஸ, நெவில் அபேரத்ன” ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
எம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்!
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment