வடக்கு மாகாணத்தில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான அமைச்சர்கள் மற்றும் படைத்தளபதிகள் மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வு மீள்குடியமர்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் 24ஆம் திகதியன்று சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடனான சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் போது வடக்கில் எந்தெந்த இடங்களை, எக்காலப்பகுதியில் விடுவிப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு அது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி பேச்சு: டி.எம்.சுவாமிநாதன்
Thursday, April 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment