Saturday, April 22, 2017

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். கடன் பிரச்னை கள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். சகோதரி ஒத்துழைப் பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: மனதிற்கு பிடித் தவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer