Wednesday, April 19, 2017

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். தொழிலில் லாபம் அதிகரிக் கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்: தன்னிச்சை யாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர் கள் உறுதுணையாக இருப் பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பர். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். முகப்பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும். வேலைச்சுமை அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கும்பம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர் களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதரர் பாசமழைப் பொழிவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer