Thursday, April 13, 2017

அநுராதபுரம் நொச்சியாகமை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளமை அந்தப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தோழி ஒருவருடன் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது பேருந்து ஒன்றுடன் மோதி குறித்த மாணவி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்துள்ள மாணவி நொச்சியாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் நேற்றைய தினம் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விபத்தின் போது படுகாயமடைந்த மற்றும் ஒரு யுவதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயிரிழந்த மாணவி 18 வயதுடையவர் எனவும், அவர் நொச்சியாகமை பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலப்பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த மாணவி தொழில் புரிந்து வந்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer