ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தான் பதவியேற்று 100 ஆவது நாள் நிறைவை மிக எளிமையாகக் கொண்டாடியதுடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தனது அனுபவங்கள் மற்றும் அலுவலகப் பணி குறித்து பேட்டியளித்துள்ளார்.
இதன் போது அவார் அமெரிக்க அதிபர் பணி மிகவும் சவாலாக இருப்பதாகவும் தனது பழைய வாழ்க்கையையே தான் இப்போது விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 24 மணி நேர பாதுகாப்பு தனது சுதந்திரத்தைப் பறித்து விட்டதாகவும் பட்டுப்புழு கூட்டில் இருப்பது போலத் தான் உணருவதாகவும் கூட அவர் தெரிவித்துள்ளார். வடகொரியா விவகாரம் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு இப்பிரச்சினைக்குத் தாம் ராஜதந்திர ரீதியிலான தீர்வையே காண விரும்புவதாகவும் அது மிகக் கடினமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வடகொரிய அதிபர் மிக இளமையாக இருப்பதால் அவருக்கு பொறுமையோ அல்லது அரசியல் ஞானமோ இல்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் வடகொரிய விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கத் தம்முடன் இணைந்து கடும் முயற்சி எடுத்து வருவதாகவும் இது தொடர்பில் பலமுறை அவருடன் தொலைபேசியில் தான் உரையாடி இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இறுதியாக ISIS தீவிரவாதிகள் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு அவர்கள் மிகவும் குரூரமானவர்கள் எனவும் அனைவரும் வேரோடு அழிக்கப் பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
Sunday, April 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment