இந்தியாவின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்று ‘மகாபாரதம்’. இந்த கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவ நாயர் அவர்கள், இதில் இடம் பெறும் பீமனனின் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் 'இரண்டாம் ஊழம்’ என்ற பெயரில் நாவலாக எழுதி இருந்தார். இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு, பல விருதுகளையும் வென்று வந்தது. தற்போது இந்த நாவலை விளம்பரப் பட உலகில் பிரபல இயக்குனராக விளங்கி வரும் ஸ்ரீகுமார் மேனன் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.
சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை டாக்டர் பி.ஆர்.ஷெட்டி தயாரிக்கிறார். இவர் அரபு ஐக்கிய எமிரேட்டில் ‘யு.ஏ.இ.எக்ஸ்சேஞ்ச’ மற்றும் ‘என்.எம்.சி.ஹெல்த் கேர்’ எனும் நிறுவனத்தின் தலைவர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் பீமனனின் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் இந்தியாவின் பல முன்னணி கலைஞர்கள், உலகின் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களும் பணியாற்றவிருகிறார்கள்.
இந்த படம் இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்பதோடு, இதுவரை இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்திராத திரைக்காவியமாக இருக்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி தெரிவித்துள்ளார். 'தி மகாபாரதம்’ என்ற பெயரில் இரண்டு பாகங்களாக உருவாகவிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை 2020 ஆம் ஆண்டில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Tuesday, April 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment