Monday, March 27, 2017

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, உடல் நலக்குறைவால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச கடந்த புதன்கிழமை முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தார். இந்த நிலையிலேயே, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer