Friday, March 24, 2017

‘குட்டிப்புலி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடிக்க உள்ளார் என முன்பே நாம் தெரிவித்திருந்தோம். கிராமத்து கதை களத்தை எப்போதுமே உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்டும் முத்தையா.. இந்த படத்தையும் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியிலேயே உருவாக்க திட்டமிட்டுள்ளார். தற்காலிகமாக ‘கொடிவீரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை சிவகங்கை உள்ளிட்ட கிராமப்புறங்களில் நடத்துவதற்குத் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கூடுதல் தகவலாக இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு நடிகர் அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மங்காத்தா, கடல் போன்ற படங்களில் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் இந்த படத்திலும் நிச்சயம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer