Sunday, March 26, 2017

எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எப் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இந்த  படைப்பிரிவில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானீரை சேர்ந்த பரீக்(25)  என்ற பெண், அதிகாரி அந்தஸ்த்தில் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் தற்போது பஞ்சாப்பில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் படையின் ஒரு பிரிவுக்கு பரீக் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குவாலியர் அருகேயுள்ள தெக்கான்பூர் முகாமில் புதிய அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தளபதிக்கான ஸ்டாரை பரிக்குக்கு அணிவித்தார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், 2.5 லட்சம் வீரர்கள் கொண்ட பாதுகாப்பு படையின் முதல் பெண் பீல்ட் ஆபிசர் என பரீக்கை குறிப்பிட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer