Wednesday, March 29, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம், அவர் எழுதியுள்ள ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ எனும் நூல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது சட்டத்தரணியுடன் குற்றத்தடுப்புப் பிரிவுக்குச் சென்ற பஷீர் சேகுதாவூத்திடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேவேளை, ஏற்கனவே இந்த நூலினை அச்சிட்ட அச்சக உரிமையாளரிடமும் குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேற்படி 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ எனும் நூலில் பல்வேறுபட்ட முறைகேடுகள் தொடர்பில் ஆவணங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இந்த ஆவணங்கள் கட்சித் தலைமையகத்திலிருந்து எவ்வாறு வெளியே சென்றது என்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவிடம் முறையிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடம் ஏற்கனவே பகிரங்கமாக தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer