Tuesday, March 28, 2017

நம் உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், விட்டமின், போன்ற அனைத்து சத்துகளும் கொண்டது கீரை. இரவில் கீரை சாப்பிடுவது செரிமான பிரச்சனையினை ஏற்படுத்துவதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

அதே போல் ஒவ்வொரு காலத்திலும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய கீரைகளும் உள்ளது. இந்த கீரைகளை அந்த காலங்களில் நாம் எடுத்து கொள்ளும் போது நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

கோடைகாலத்தில்(சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சகீரையினை தவிர்க்கவேண்டும்.

காற்று அதிகமாக வீசும் காலத்தில்(ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

பின் மழைகாலங்களில் (ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.
பின் பனிக்காலங்களில் (மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.

பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.

1 comments :

  1. Please note that this restrictions are based on seasons in Northern hemisphere. If one is living in Southern hemisphere ( such as Australia & New Zealand ), you need to apply the season applicable there.

    ReplyDelete

 
Toggle Footer