Tuesday, March 28, 2017

உரிய நேரம் வரும் போது ஈழத் தமிழர்களாகிய உங்களை சந்திப்பேன் என தென் இந்திய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lyca நிறுவனத்தினால் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக இருந்தது. எனினும், தமிழக அரசியல் வாதிகளின் தலையீடு காரணமாக அந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.

ரஜினிகாந்தின் இலங்கை விஜயத்திற்கு தடை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer