Thursday, March 23, 2017

பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில், அவரினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் தன்னிடத்தில் இருப்பதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பப்பட்ட கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியை, மக்கள் பாவனைக்காக நேற்று புதன்கிழமை திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது.

இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல், நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக, நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அது குறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜ் என்னுடன் இருந்து, அதற்கெதிராகக் குரல் கொடுத்தமையால் அவரும் கொலை செய்யப்பட்டார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக வழக்காடும் நிலைக்கு நாட்டைத் தள்ளியமைக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்கவேண்டும்.”என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer