Tuesday, March 28, 2017

புதிய அரசியலமைப்புப் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்துப் பேசுவதற்கு கூட்டு எதிரிணி (மஹிந்த அணி) முடிவு செய்துள்ளது. இந்தச் சந்திப்புக்கான நேரத்தினை ஒதுக்கிக் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கூட்டு எதிரணி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.

புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தாம் கரிசனையோடு இருப்பதாகவும், அது பற்றி ஜனாதிபதியோடு பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்த் தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer