Sunday, March 26, 2017

இலங்கை சென்று ஈழத் தமிழர்களின் நிலையை பார்வையிட்டு, அவர்களுக்கு உதவிகளை செய்ய இருந்த ரஜனி காந்தை, தமிழகத்தின் சில தலைவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். ஈழப் பிரச்சனை என்றால் அதனை தாம் தான் கையாழவேண்டும் என்ற நினைப்பு இவர்களுக்கு உண்டு. வேறு யாராவது உதவி செய்ய வந்தால் இவர்கள் விட மாட்டார்கள். தாமும் உதவி செய்ய மாட்டார்கள். இன் நிலையில்  பல தமிழர்கள், ஆத்திரமடைந்து, போராட்டங்களில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழ தமிழ் கலைஞர்கள் மற்றும் மக்கள் இணைந்து பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்த உள்ளதாகவும். யாழ் நல்லூர் கோவில் வழாகத்தில் இருந்து இது மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகும் என்றும் அறியப்படுகிறது.  ஈழத் தமிழர்களுக்கு யார் உதவி செய்வது , யார் உதவி செய்யக் கூடாது என்று தமிழக தலைவர்கள் தீர்மானிக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் சுய நலமாக செயல்படும் தொல் திருமா மற்றும் வேல் முருகனுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் ஒன்றை நடத்தவும் உள்ளார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த வட கிழக்கு சென்று இடங்களை பார்வையிட்டு, தமிழர்களுக்கு சுமார் 20 கோடி ரூபா வரையில் உதவிகளை செய்ய இருந்ததாகவும். ஆனால் சுய நலம் கருதியே சில தமிழக தலைவர்கள் அவரை தடுத்து விட்டதாகவும் ஈழத் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்று ரஜனியை போகவேண்டாம் என்று தடுத்த அதே தொல் திருமா தான், மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பூ செண்டு கொடுத்து வாழ்த்தினார் என்பதனையும் எவரும் மறுந்துவிடவில்லை என்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer