Wednesday, March 29, 2017

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்காது, அரசாங்கம் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்க முடியாது என்று ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டு பேசும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு எங்களினால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம். மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், மக்களுக்குப் பதில் கூறாமல், வருடக்கணக்கில் மக்களின் நிலப் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது.

மக்களின் தொடர் போராட்டங்களின் மத்தியிலே கேப்பாப்புலவு பகுதியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தமது நிலங்களை மீட்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையிலே முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். காணிகளை விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்’என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer