Sunday, March 26, 2017

02.11.2007ம் ஆண்டு இலங்கை ராஜதந்திர கடவுச் சீட்டோடு, லண்டன் நோக்கி வந்த கருணா. அன்று ஹீத் ரூ விமான நிலையத்தில் கைதாகினார். அன்றைய தினம் பிள்ளையானே அவரைக் காட்டிக் கொடுத்ததாகவும். பிள்ளையானின் ஆட்களே கருணா லண்டன் வருவதை அன் நாட்டு அதிகாரிகளுக்கு சொன்னதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று கூறப்படுகிறது.

புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த கருணா, பல உதவிகளை இலங்கை ராணுவத்திற்கு செய்துவிட்டு. எல்லா திட்டங்களையும் போட்டுக் கொடுத்துவிட்டு. ஆளை விட்டால் போதும். என் மனைவியோடு சென்று நான் லண்டனில் செட்டில் ஆகி விடுகிறேன் என்ற நோக்கத்தோடு தான் புறப்பட்டார். அவர் சொந்தப் பெயரில் தான் அவருக்கு ராஜதந்திர கடவுச் சீட்டும் வழங்கப்பட்டது. இருப்பினும் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் தேடும் பட்டியலில், புலிகளின் சில மூத்த தலைவர்களது பெயர் ஏற்கனவே இருந்துள்ளது. இதில் கருணாவின் பெயரும் அடங்குகிறது.

இதனூடாகவே கருணா கைதுசெய்யப்பட்டார் என்று தற்போது கசிந்துள்ள சில ஆவணங்கள் ஊடாக செய்திகள் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள், கருணாவுக்கு எதிராக விசாரணை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். சில அமைப்புகள் நீதிமன்றத்தையும் அணுகினார்கள். ஆனால் புலிகள் இயக்கம் தோற்று, யுத்தம் முடியும் வரை கருணா உங்களுக்கு தேவை. எனவே அவரை லண்டன் சிறையில் முடக்க வேண்டாம் என்று வல்லரசு நாடு ஒன்று இலங்கைக்கு கூறியுள்ளது. அத்தோடு அந்த வல்லரசு நாட்டின் அழுத்தம் காரணமாகவே , கருணாவை வெகு சீக்கிரமாக விடுதலை செய்த பிரித்தானியா. அவரை உடனே நாடு கடத்தி இலங்கை செல்ல அனுமதித்தது.

பொதுவாக நாடு கடத்தப்படுவது என்பது 14 மாதங்கள் இழுபடும் ஒரு நடவடிக்கை ஆகும். ஆனால் கருணாவை பொறுத்தவரை அது மிகவேகமாக நடந்துள்ளது. ஒட்டு மொத்ததில் கருணாவை மீண்டும் களம் இறக்கவே வல்லரசுகள் முனைப்புகாட்டியுள்ளது என்பது தெரியவருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer