Sunday, March 26, 2017

தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம்செய்யும் கட்டத்தில் அக்கட்சியின் டெல்லி தலைமை தீவிரமாக இருக்கிறது. இப்போதைய தலைவரான தமிழிசையை மாற்றவேண்டும் என மாநிலத்தின் பல்வேறு கோஷ்டிகளும் மல்லுக்கட்டுகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தந்ததைப் போல, இங்கும் அக்கட்சியின் மரபான முறைமைப்படி தலைவர் பதவியை மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழிசைக்கு மாற்றாக வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சீனிவாசன், கே.டி.ராகவன் ஆகியோரின் பெயர்கள்ளை தலைமையால் பரிசீலிக்கப்படுகின்றன. விரைவில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், வடமாநில பாணி இங்கு ஒத்துவராது என தமிழிசையின் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer