Tuesday, March 28, 2017

குற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் ஏதும் இராணுவத்தில் இருக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றில் நேற்று திங்கட்கிழமை அவர் கலந்து கொண்டிருந்தார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலுக்கு வருவது தொடர்பில் நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய முடிந்தால் நான் அரசியலுக்கு வருவேன். என்னால், நல்லது செய்ய முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளேன்.

இறுதி மோதல்களின் போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஆனால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூறுவதில் சிக்கல் நிலை நீடிக்கின்றது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer