Sunday, March 26, 2017

நாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்றவாளியாக்கி சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை. அவர்கள்த ண்டிக்கப்படுவதையும் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கு பதிலையே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்கின்றார்கள். அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் கூறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்த நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொறுப்பாகவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதேபோன்று இராணுவம் போரின் போது கைப்பற்றிய மக்களது காணிகளை மீள மக்களிடம் கையளிக்க வேண்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக செயல்திறன் மிக்க தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்துள்ளது. எனினும், இவற்றை செய்வது இலகுவான காரியமாக அமையவில்லை.

வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இனவாதத்தையும் மதவாதங்களையும் தூண்டி நாட்டின் ஒற்றுமையை குழப்பிக்கொண்டிருக்கிறார். எவ்வாறாயினும் யங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்றவாளிகளாக தண்டிக்கப் போவதில்லை.

நாட்டில் யுத்தம் நடந்த போது நாட்டில் இருக்காமல் வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் மக்கள் கூறுவது போன்று நாம் எதனையும் செய்ய முடியாது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer