Friday, March 24, 2017

தமது பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு காண முடியவில்லை என்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வலியுறுத்தியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த வடக்கு முதலமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர், மாவட்டச் செயலகத்துக்கு வெளியே கடந்த 26 நாட்களாக மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை சந்திக்காமல் சென்றனர். இதனையடுத்தே, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தின் புத்திஜீவிகளான தம்மை அந்நியர்களாக நினைத்து இவ்வாறு ஏறெடுத்தும் பாராமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமது பிரச்சினைகளை கேட்க முடியாவிட்டால் அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer