Friday, March 24, 2017

இலங்கையுடனான நட்புறவை மேப்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவலோடு இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

ரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையான கிரெம்ளின் மாளிகைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்றார். அரச தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற நட்புறவு உரையாடலின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளுக்கு 60 ஆண்டு நிறைவடையும் வேளையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இருநாட்டு பொருளாதார, வர்த்தக, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்தி உறுதியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer