Monday, March 27, 2017

நெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த்த பின்தான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் 32 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் இன்று மத்திய அரசு கை எழுத்திடும் நிகழ்வு தற்போது நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்தான்,ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான நெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த்த பின் தான், அத்திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பொன் .ராதா கிருஷ்ணனும் தமிழக மக்கள் பொறுமைக் காக்க வேண்டும் என்று, தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer