Sunday, March 26, 2017

தமிழகத்தில் ஈழப் பிரச்சனையை வைத்தே அரசியல் நடத்தும் தலைவர்களும் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்று துன்பம் அனுபவித்த தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர், ஈழப் பிரச்சனையா ? அதனை நான் தான் கையாளவேண்டும். அது வேறு யார் கைகளுக்கும் சென்றுவிடக் கூடாது என்று அலைவார்கள். லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனம், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் 150 வீடுகளை கட்டி அதனை தமிழர்களுக்கு கையளிக்க இருக்கிறது.

அதற்கான விழாவுக்கு ரஜனியை அழைத்தார்கள். ரஜனியும் ஒப்புக்கொண்டு தான் யாழ்பாணம் செல்வதாக கூறினார். ஆனால் அவர் 23 காலை கொடுத்த ஒரு சின்ன பேட்டி தான் முதலில் பிரச்சனையை கிளப்பிவிட்டது என்று அறியப்படுகிறது. அதாவது தான் யாழ் செல்வதாகவும் மக்களை சந்தித்து குறைகளை அறிய உள்ளதாகவும் ரஜனி கூறியதும். அதனை சில தமிழக தலைவர்களால் பொறுக்க முடியவில்லை. உடனே சாட ஆரம்பித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அவர்கள் இது ஒரு தனிப்பட்ட விடையம் என்று கூறி இருந்தால், அவரை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. ஆனால் அவர் கூறிய சில வார்த்தைகள் , சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

உடனே இலங்கை சென்றால் இலங்கை அரசுக்கு வெள்ளையடிப்பது போல நிலமை ஆகிவிடும் என்று கூறி அவரை ஒருவாறு தடுத்துவிட்டார்கள். தான் இலங்கை செல்லவில்லை என ரஜனி தற்போது அறிவித்துள்ள நிலையில். லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, இன் நிகழ்வுகளை ரத்துச் செய்வதாகவும். ஆனால் ஏப்பிரல் 10ம் திகதி வீடுகளை தமிழர்களுக்கு கொடுக்க உள்ளதகவும் அறிவித்துள்ளார்கள். எனவே வீடுகளை இழந்த 150 தமிழர்களாவது இம் முறை தமிழர் புத்தாண்டுக்கு தமது சொந்த வீட்டிற்கு குடி புக உள்ளார்கள் என்பது நல்ல செய்தி. இதனை தமிழகத்தில் உள்ள எத்தனை தலைவர்கள் செய்வார்கள் என்று தெரியவில்லை ? ஆனால் வீர வசனம் மட்டும் பேசி மக்களை உசுப்பிவிடுவது இவர்களுக்கு கை வந்த கலை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer