Thursday, March 23, 2017

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது
என்று வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.o படத்தின்
படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைப்பெறும் இந்த
பகுதியில் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையூறு
செய்யும் வகையில் படப்பிடிப்பு நடந்து வருவதை பத்திரிகையாளர்கள் படம்
பிடிக்க சென்றபோது, பத்திரிகையாளர்களை ஷங்கரின் உறவினர் மற்றும் பலர்
அடித்துத் தாக்கியதாக தகவல் தெரிய வருகிறது.

இதையடுத்து, தாக்கியவர்கள் மீது காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள்
சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதும்
செய்யப்பட்டனர்.இந்நிலையில்தான் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில்
இது குறித்து வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஷங்கர்.

நான் மிகவும் கவனமாக இருப்பேன். இருந்திருந்தும் இது போன்ற ஒரு சம்பவம்
நடைபெற்றிருப்பது வருத்தத்திற்கு உரியது. இனி வரும் காலத்தில், இது
போன்று எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன்.என்று கூறினார்.

சங்கர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், இரு
புகைப்படக்கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரும் திரும்பப்
பெறப்பட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer