Sunday, March 26, 2017

புலம்பெயர் தேசங்களிலுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட புலமையாளர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பேச்சவார்த்தை நடைபெற்றது. முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதலமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கருசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பாக அதனைக் கருதி அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது தாயகத்திற்கான ஓர் பணியாக கொண்டு சேவையாற்ற முன் வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer