Wednesday, March 29, 2017

கடந்த ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த 'அப்பா' படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதோடு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டும் விதமாகவும் அமைந்திருந்தது. மகன்-மகள்களின் புரிதல் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்பதை பொறுப்புடன் சொல்லிய இந்த படம் தற்போது, மலையாளத்தில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி தான் இயக்க உள்ளார்.

ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள சமுத்திரகனி இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜை இன்று காலை எர்ணாகுளத்தில் நடந்த நிலையில், படத்திற்கு ‘ஆகாச மிட்டாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபட்டுள்ளது. இதில் சமுத்திரகனியின்  கதாபாத்திரத்தில் ஜெயராமும், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள நடிகர் ஷாஜோனும் நடிக்கவுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer