Tuesday, March 28, 2017

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரபரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.

அதன்படி, குறித்த பாடசாலையின் மாணவி பரசுராம் மதுரா 9A சித்திகளை பெற்றுள்ளார். மேலும், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த க.ருபிசிகா என்ற மாணவி 7A ,1B,1C சித்திகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்காக உழைத்த பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer